Friday, July 31, 2020

தாயாக ஆசை ....

தாயாக ஆசை ....

நம் குழந்தை தங்கத் தொட்டிலாம் 
      உன் மடியில் தவழ 
நான் தாயாக ஆசை....

நம் குழந்தையில் மதி வதனத்திற்கு 
     உன் செவ்விதழால் முத்தமிட 
நான் தாயாக ஆசை....

என் குழந்தை என் குழந்தையென 
     ஓராயிரம் முறை சொல்ல 
நான் தாயாக ஆசை....

நானே நீயானதால் என் கணவா 
     எனக்கென்றும் பேத மில்லை 
நான் தாயாக ஆசை....

உன்னோடு நான் உறைந்திருக்க என்னோடு 
     நீ என்றும் இசைந்திருக்க 
நான் தாயாக ஆசை....

உன்னை ஈரேழு ஜென்மமும் என்னெஞ்சில்  
     சுமக்க தாயாக ஆசை
என்றென்றும் தாயாக ஆசை..


Thursday, September 13, 2012

                  நதியின் கரை ....
நதியின் ஊடே 
தொடர்ந்து செல்லும்
கரையாவேன் நான் 
நதியாக நீ
இருந்தால்....
 
                                வலை....... 
சூரியனான என்னை
நீ உன்
கண்ணிமைக்குள் அடைத்தாய் 
ஒற்றைப் பார்வை
வலையை என் 
மீது வீசி....

 
                        பட்டாம்பூச்சி....
கைரேகை போல
உன்னை என்
கைகளுக்குள் காக்க
நினைத்தேன் ஆனால்
நீயோ ஒரு
சுதந்திரப் பட்டாம்பூச்சி
என்று சொல்லாமல்
சொன்னாய் ஆதலால் 
உன்னில் நான்
வண்ணமாக இருக்கத்  
துடிக்கிறேன் அனுமதிப்பாயா....  ?


 
             வெள்ளைத் தமிழச்சி...
வெள்ளைத் தமிழச்சியே 
உன் அறையில்
உள்ள கண்ணாடியும்
தமிழ் கற்றுக் 
கொண்டது என்னைப்
போல உன்னிடமிருந்து....


 
               முதியோர் இல்லம்.... 
என்ன இது வாழ்க்கை 
அன்று கட்டாந்தரையில் வந்த
தூக்கம் இன்று கட்டில்
மெத்தையில் இல்லை காரணம்
நான் இருப்பது முதியோர் - இல்லத்தில்.....
 
உனக்காக......
அதிகாலை சூரியன் உதிப்பது
உனக்காக 
அந்தியில் மாலை மயங்குவதும் 
உனக்காக 
இரவில் நிலவு தோன்றுவதும் 
உனக்காக
இவை போல என் - நெஞ்சமும் 
உனக்காக
எவ்வாறு மற்ற மூன்றையும் 
மறுக்காமல் 
ஏற்றாயோ அவ்வாரே என்னையும் 
ஏற்பாய் 
எனக் காத்துக் கொண்டிருக்கிறேன்
அடி
வானம் சேரக் காத்துக்கொண்டிருக்கும் - வானவில்லைப் 
போல
என்றும் உன் நினைவில்.....