Saturday, October 8, 2011

EAN KAVIDHAI...

                     உயிர்த் தீ !!!
அன்பின் வழியது அன்னையின்  உயிர்த் தீ 
அமைதியைப் போற்றிடும் அசோகன் உயிர்த் தீ
ஆசையை அறுக்கும் புத்தனின் உயிர்த் தீ 
ஐம்புலன் அடக்கம் ஞானியின் உயிர்த் தீ

சமரச உணர்வு வள்ளலாரின் உயிர்த் தீ
கொடையின் எல்லை வள்ளலின் உயிர்த் தீ
சுதந்திர தாகம் பாரதியின் உயிர்த் தீ
வாய்மை அஹிம்சை காந்தியின் உயிர்த் தீ

கற்பின் திட்பம் பெண்மையின் உயிர்த் தீ 
வாழ்வியல் விளக்கம் குறளின் உயிர்த் தீ
காவிய வளமை கம்பனின் உயிர்த் தீ
ஓயா உழைப்பு விஞ்ஞானியின் உயிர்த் தீ

தாயக மேன்மை தலைவனின் உயிர்த் தீ 
தலைவனின் கனவு தொண்டனின் உயிர்த் தீ
கட்டுக் காவல் வீரனின் உயிர்த் தீ
இயற்கை வேளாண்மை உழவனின் உயிர்த் தீ

ஆக்கமும் ஊக்கமும் அறிஞனின் உயிர்த் தீ 
அறிவைப் புகட்டல் ஆசானின் உயிர்த் தீ
பண்பொடு நிற்றல் மாணவனின் உயிர்த் தீ
இளைஞர் எழுச்சி விவேகானந்தர் உயிர்த் தீ

ஊழலுக்கு எதிராய் அன்னாவின் உயிர்த் தீ 
மானுடம் காத்தல் மனிதனின் உயிர்த் தீ
பாரை உயர்த்திடும் பாட்டாளியின் உயிர்த் தீ
கனவிலும் நனவிலும் கலந்திட்ட உயிர்த் தீ

உயிரிலும் உணர்விலும் ஒளிவிடும் உயிர்த் தீ 
தாய் மொழி உயர்த்தல் எந்தன் உயிர்த் தீ
செந்தமிழ் மூச்சே என்னில் உயிர்த் தீ
செப்பிடுவேன் இதை தலை நிமிர்த்தி..... 


 

  

    

Sunday, October 2, 2011

ean kavidhai

                           யாதுமாகி நின்றாய் நீ...!!!

கடலின்  அலையில் உன் ஆர்பரிப்பைக் கண்டேன்!
கதிரவனின் வெப்பத்தில் உன் சினத்தை கண்டேன்!
நிலவில் ஒளியில் உன் வதனத்தைக் கண்டேன் !
இயற்கையின் பசுமையில் உன் அன்பைக் கண்டேன்!
காற்றின் பேரனைபில் உன் அரவனைப்பைக் கண்டேன்!
விளக்கின் ஒளியில் உன் ஞானத்தைக் கண்டேன்!
மின்னும் நட்சத்திரத்தில் உன் புன்னகைக் கண்டேன்!
மல்லிகயுன் நறுமணத்தில் உன் வாசம் கண்டேன் !

என் தாயே...                                      
யாதுமாகி நின்றாய் நீ...!!!