Saturday, April 21, 2012

                                           ஆந்திராவிலும் நம் ஆண்டாள்

            ஆண்டாள் தமிழகத்திற்கு மட்டுமே உரியவள் என்று யாரவது நினைத்தால் அது  தவறு. ஆந்திராவில் உள்ள பெருமாள் கோயில்களிலும் ஆண்டாளை தேவியருள் ஒருவராக காணலாம்.
            ஆண்டாளின் பக்தியும் வாழ்கையும் மன்னர் கிருஷ்ணதேவராயரை
 மிகவும் கவர்ந்தது, அதன் பலனாக ஆண்டாளை பற்றி "அமுக்த  மால்யதா" என்ற பெயரில் 900 பாடல்களில் ஒரு காவியம் படைத்தார்.
           தெலுங்கில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக இந்நூல் கருதப்படுகிறது. அத்துடன் ஆண்டாளின் புகழ் தெலுங்கு தேசம் முழுவது பரவி, கோவில்களிலும் இடம்பெற்றுவிட்டாள்