Thursday, September 13, 2012

                  நதியின் கரை ....
நதியின் ஊடே 
தொடர்ந்து செல்லும்
கரையாவேன் நான் 
நதியாக நீ
இருந்தால்....
 
                                வலை....... 
சூரியனான என்னை
நீ உன்
கண்ணிமைக்குள் அடைத்தாய் 
ஒற்றைப் பார்வை
வலையை என் 
மீது வீசி....

 
                        பட்டாம்பூச்சி....
கைரேகை போல
உன்னை என்
கைகளுக்குள் காக்க
நினைத்தேன் ஆனால்
நீயோ ஒரு
சுதந்திரப் பட்டாம்பூச்சி
என்று சொல்லாமல்
சொன்னாய் ஆதலால் 
உன்னில் நான்
வண்ணமாக இருக்கத்  
துடிக்கிறேன் அனுமதிப்பாயா....  ?


 
             வெள்ளைத் தமிழச்சி...
வெள்ளைத் தமிழச்சியே 
உன் அறையில்
உள்ள கண்ணாடியும்
தமிழ் கற்றுக் 
கொண்டது என்னைப்
போல உன்னிடமிருந்து....


 
               முதியோர் இல்லம்.... 
என்ன இது வாழ்க்கை 
அன்று கட்டாந்தரையில் வந்த
தூக்கம் இன்று கட்டில்
மெத்தையில் இல்லை காரணம்
நான் இருப்பது முதியோர் - இல்லத்தில்.....
 
உனக்காக......
அதிகாலை சூரியன் உதிப்பது
உனக்காக 
அந்தியில் மாலை மயங்குவதும் 
உனக்காக 
இரவில் நிலவு தோன்றுவதும் 
உனக்காக
இவை போல என் - நெஞ்சமும் 
உனக்காக
எவ்வாறு மற்ற மூன்றையும் 
மறுக்காமல் 
ஏற்றாயோ அவ்வாரே என்னையும் 
ஏற்பாய் 
எனக் காத்துக் கொண்டிருக்கிறேன்
அடி
வானம் சேரக் காத்துக்கொண்டிருக்கும் - வானவில்லைப் 
போல
என்றும் உன் நினைவில்..... 

 
                          வெண் பனி....
உன் தொடுதலால் 
உருகிக் கொண்டிருந்த 
வெண்பனியும் உறைந்த 
மாயம் என்னவோ...? 


Sunday, September 9, 2012

                        இமை ஓரம்.... 
பெற்ற காயங்களை 
நினைக்கும் பொழுது 
என் இமை 
ஓரம் கண்ணீர் 
துளிகள் இதை 
என் தாய்
அறியாமல் சிந்த
முயற்சித்தேன் இருந்தும்
கண்டுவிட்டாள் அவள் 
இதை நான் 
பார்த்த அந்த 
மாத்திரத்தில் என்
காயத்தை விட
அவள் பாசம்
தெரிந்தது அவள்
இமை ஓரம்....

 
       இலையுதிர் கால இலை...
 நீ என்
கரம் பற்றியதும்
வெட்கிச் சிவந்தேன் 
இலையுதிர் கால 
இலைப் போல... 
 
           கரு விழி அழகினிலே....
கருநீல நிறம் 
கொண்ட அந்த 
யாமப் பொழுது 
நீள் வானும்
தோற்றுப் போனது
என் தலைவியின்
கரு விழி
கொள்ளை அழகினிலே....

Wednesday, September 5, 2012

                       உன் தோளில்...
உன் தோளில்
அலையென ஆடிய
சேலையை கண்ட
மாத்திரத்தில் சிறியதாய்
கோபமும் பொறாமையும்
கலந்த இழைகள்
என் நெஞ்சில்
ஓடின தவிர்க்க
முடியாமல் தவித்தேன்...
 
                      கார் குழல்....
என்னவளின் கார்
குழலின் வாசத்திலே
தொலைத்தேன் என்
தூங்கா இரவுகளை.....


                            நிலம்......
நிலங்களை அழித்து 
விடுகின்றனர்
அவர்கள் அழித்தது
மரம்
செடி கொடிகள்
மட்டும்
அல்ல இந்தக் 
கால  
இளைஞர்களின் பால்ய 
ஞாபகங்களை....
 

Monday, September 3, 2012

                             மாரி....
மேகமாய் இருந்த
என்னை சிறு 
தென்றலாய் வந்து
நீ மெல்லத்
தழுவியதால் நாணம்
கொண்டு மாரியானேன் 
உன் நிலம்
என்னும் மனம்
தனை  நனைக்க  .......