என்ன ஒரு நடிப்பு! இவர்களின் நடிப்பிற்கு முன் ஆஸ்கார் விருதே தலைகுனியும். யார் இவர்கள் என தெரிந்து கொள்ள ஆவலா? நான் குறிபிட்டது ராசாத்தி அம்மாளையும் தயாளு அம்மாளையும் தான். கடவுளே இல்ல என கூறும் குடும்பத்தை சேர்ந்த ராசாத்தி அம்மாளோ உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் பூஜை செய்துள்ளார்... ஊரிற்கு ஒரு நியாயம் இவர்களுக்கு ஒரு நியாயமா? கோபாலபுர இல்லத்திற்கு ஒரு முறை பகவான் ஸ்ரீ ஸ்ரீ புட்டபர்த்தி சாய் பாபா அவர்கள் வருகை தந்தார். அப்பொழுது தயாளு அம்மாள் அவர்கள் பாபாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். ஏன் அம்மா இந்த இரட்டை வேடம்? கடவுள் இல்லை என கூறி விட்டு ஏன் கோவிலுக்கு செல்ல வேண்டும் ஒரு துறவியின் ஆசியை வாங்க வேண்டும். இவர்களாவது பரவா இல்லை, கலைஞர் அவர்களோ ஒரு படி மேலே சென்றுவிட்டார்... பகுத்தறிவுவாதி என்று தம்மை பறைசாற்றி
கொள்ளும் இவர் , தஞ்சை கோவிலுக்கு முன் வாசல் வழியாக ஏன் செல்ல மறுத்தார்? எல்லாம் (ஆண்டவனுக்கே) பகுத்தறிவுவாதிகளுக்கே வெளிச்சம்...