Thursday, August 30, 2012

நேற்று.... இன்று.... நாளை....
இறைவனாலும் இயற்கையாலும் 
நேற்று அளிக்கப்பட்டதையும் 
இன்றைக்கு அளிக்கப்படுவதைப் 
பற்றியும் நாளை 
அளிக்கப்படப் போவதைப் 
பற்றியும் ஒரு 
நாளும் என்னால்
சிந்தனை செய்யாமல்  
இருக்க முடியவில்லை
என்ன செய்ய 
நான் மனித
பிறப்பு எடுத்து
விட்டேனே சிந்தனை
செய்யக் கூடாது
என்று கட்டளை
இட்டாலும் மனம்
என் பேச்சை
கேட்க மறுப்பது
ஏனோ?????......... 


 
      காலமெல்லாம் உன்னோடு......
காலமெல்லாம் உன்னோடு
உன் மடி
நான் தூங்க
என் கரம் 
நீ பற்றி
என்னைக் கொஞ்ச
ஆஹா! அந்த
நிமிடமே என்னை
மரணம் ஆரத்
தழுவினாலும் அதுவும்
ஒரு வித 
சுகம் தான்...
 
                   யுகம் யுகமாய்...
சொல்லாமல் சொன்னாய் 
உன் காதலின்
உணர்வை உன்
இதமான மூச்சுக்
காற்றை மென்மையாய் 
என் மீது 
படர விட்டு;
இதற்குத் தானே 
நான் யுகம்
யுகமாய்  காத்துக்
கொண்டிருந்தேன்; இது 
தொடர இனிமேலும் 
காத்துக் கொண்டிருக்க 
நான் தயார்......
 

Wednesday, August 29, 2012

                 மனதுக்குள் சாரல்....
மனதுக்குள் சாரல்
அடித்தது உன்னைப்
பார்த்த அந்த
நொடியில்; கண்ணுக்குள்
விதையாய் நுழைந்த
நீ என்
உயிருக்குள் மரமாய்
முளைத்தாய்; நன்கு
வளர்ந்தாய் கிளைகள்
வேரூன்றி நிற்கும்
வண்ணம்; உன்
அன்பை என்னுள்
புகுத்தி அதற்கு
நீர் விட்டாய்
இன்று நான்
பூத்தேன், உன்னால்.... 
 
                        மனித மனம்...
நன்றாய் படித்தால்
நான் மெச்சுவேன்
எனக் கூறிய
என் தோழியின்
கண்ணில் ஏளனத்தையே 
மட்டுமே பார்த்துக்
கொண்டிருந்த நான்
அன்று முதன்
முதலாய் பொறாமையைக்
கண்டேன் என் 
பாராட்டு சான்றிதழை 
காண்பித்த உடன் 
இது தான்
மனித மனமோ???... 
ப்பினிக்ஸ் பறவை.....
கண்ட பொழுதே சொப்பனம்
கொள்ளச் செய்யும் சுகந்தமே 
சூரியனாய் நீ என்னை
சுட்டெரித்தாலும் உன்னையே நேசித்து
உன்னுள்ளே என்னை தொலைத்த 
ப்பினிக்ஸ் பறவை நான்....

Sunday, August 26, 2012

                தெரியுமா????                    எண்:3
கோள்களும், பெயர் அர்த்தமும்
மெர்குரி - வணிகம், பேச்சுத் திறமை,   
                    பயணத்திற்கான ரோமானியக் கடவுள் 
வீனஸ் - வசந்த காலம், மலர்ச்சி, வெற்றி மற்றும் 
                  அழகு இவற்றிற்கான ரோமானியக் கடவுள் 
மார்ஸ் - போர் மற்றும் வேளாண்மைக்காண  
                  ரோமானியக் கடவுள் 
ஜுபிட்டர் - ரோமானியக் கடவுள், ஆண்களின் 
                       கடவுள், வானத்தின் கடவுள், 
                      இடியின் கடவுள்  மற்றும் கடவுள்களின்
                     அளுநர்    
சாட்டன் - ரோமானியக் கடவுள், காலம்,விடுதலை
                     மற்றும் வேளாண்மைக் கடவுள் 
யுரேநஸ் - ரோமானியக் கடவுள், வானம் மற்றும்
                      சொர்கத்தின் தந்தை
நெப்டியூன் - நீர் மற்றும் கடலின் ரோமானியக்
                        கடவுள் 
ப்ளுடோ - பாதாள உலகத்தின் கிரேக்க கடவுள்
 
                       தாழம்பூ.....
வாழ்கை ஒரு
தாழம்பூ போல
முள்ளைக் கண்டால்
வாசம் கிடைக்காது 
வாசம் வேண்டுமெனில்
முள்ளை சமாளித்து
தான் ஆக
வேண்டும் இதுவே 
இயற்கையின் நியதி...... 

Saturday, August 25, 2012

                 தெரியுமா???                  எண்:2
வங்காளத்தின் துயரம்: தாமோதர் நதி (மேற்கு வங்கம்)
அசாமின் துயரம்: பிரமபுத்திரா நதி 
பீகாரின் துயரம்: கோசி நதி 
தென்னகத்தின் மான்செஸ்டர்: கோயம்புத்தூர் 
மாம்பழ நகரம்: சேலம்
தமிழ்நாட்டின் ஸ்காட்லான்ட்:திண்டுக்கல்
மலைக்கோட்டை நகரம்: திருச்சிராப்பள்ளி 
கோவில் நகரம், உறங்கா நகரம்: மதுரை 
மலைகளின் ராணி: ஊட்டி
தமிழகத்தின் நெற்களஞ்சியம்: தஞ்சாவூர் 
தென்னாட்டு ஸ்பா: குற்றாலம் 
ஏழைகளின் ஊட்டி: ஏற்காடு

 



 
                   தெரியுமா????
பொற்கோவில் நகரம்: அமிர்தசரஸ் 
அரண்மனை நகரம்: கொல்கத்தா 
இந்தியாவின்  பூந்தோட்டம்: பெங்களூர் 
இந்தியாவின் நுழைவுவாயில்: மும்பை 
இந்தியாவின் மான்செஸ்டர்: மும்பை 
இளஞ்சிகப்பு நகரம்: ஜெய்பூர் 
அரபிக் கடலின் அரசி: கொச்சின் 
இந்தியாவின் நறுமணத் தோட்டம்: கேரளா 
பஞ்ச நதிகளின் நிலம்: பஞ்சாப் 
கிழக்கின் ஸ்காட்லாந்து: மேகாலயா 
எழு தீவுகளின் நகரம்: மும்பை 
இந்தியாவின் விளையாட்டு மைதானம்: காஷ்மீர் 
பாறை நகரம்: சண்டிகர் 
இந்தியாவின் ஆபரணம்: மணிப்பூர் 
இந்தியாவின் கோவில் நகரம்: புவனேஸ்வர் 
கீழை நாடுகளின் வெனிஸ்: ஆலப்புழை     
       காதல் சொல்ல வந்தேன்....
அதிகாலை புல்லின் மேல்  
உறங்கும் சிறு பனித்
துளியைப் பருகத் துடிக்கும்
கதிரவனைப் போல

ஆரவாரமாய் மலருக்குள்ளே தேனை 
பருக செல்லும் சிறிய தேனியை 
போல உன் அருகே 
ஆனந்தத்துடன் வந்தேன்  

என் காதலை உன் 
காதோரம் மெல்லியதாய் நான் 
கூற அதை கேட்டு 
நீ  நாணம் கொள்வதை
நான் பார்க்க..... 
 
             விழி என்னும் உளி......
பெண்ணே விழி
என்னும் உளியால்
காதல் என்னும்
சிலையை என்னுள்
நீ செதுக்ககினாய்
பின் யாரும்
அறியாமல் நீ
அதற்கு உயிரூட்டினாய்
உன் காதலால்.......
                            தோல்வி...
தோல்வியும் புனிதமாகும்
நாம்
நண்பர்களிடத்தில் தோற்கும் 
பொழுது
அந்த தோல்விக்காக 
நானும்
காத்துக் கொண்டிருக்கிறேன்  
ஒரு 
பாசமிகு தோழியாய் .....

Friday, August 24, 2012

                அழகிய பொய்......
சில சமயங்களில்
பொய் கூட 
அழகாக இருக்கிறது 
என் அருகில்
நீ இருந்து 
பொய் கூறி
என்னை மயக்கும்
அந்த வேளையில்....
 

Thursday, August 23, 2012

                         தென்றல்.....
நிதம் உன்னை 
தொட நினைக்கிறன் 
உன் மடி
மீது தவழும் 
குளிர் தென்றலாய் 
நீ அறியாமல்.... 
 
                         தவம்...
பத்து மாதம்
நான் இருட்டறையில்
கடும் தவம்
புரிந்ததன் பயனாய்
உன்னை அடைந்தேன் ;
தாயே, நான்  
ஐயிரு திங்கள் 
கண் மூடி
செய்த கடும்
தவத்தினால் தான், 
நீ எனக்கு 
கிடைக்கப் பெற்றாய் ;
உனக்காக நான் 
ஈரேழு பிறவிக்கும் 
தவம் செய்ய 
கடமை கொண்டிருக்கிறேன் ......

EAN KAVIDHAI

         கண்களால் கவிதை.... 
கண்களாலும் கவிதையும்
கூறமுடியும் என 
உணர்ந்தேன் என்னவளின் 
கண்களை முதல் 
முறை கண்ட 
அந்த நொடியில்.... 



             தண்டனை நிச்சயம்....
என் நெஞ்சத்தை
உன் விழி
அம்புகளால் கொல்லும் 
உனக்கு தண்டனை
நிச்சயம் என்னிடமிருந்து
மீளமுடியாத அன்பால்.....

                   கண்ணன்....
வெண்ணிற பங்கயம்
நாணச் சிவந்தது 
என்னை போல
என் கண்ணனது
திருவடியை சேர்ந்தவுடன்
அதானே அவனது
அழகில் மயங்காதவர்கள்
இவ்வுலகில் உண்டோ???
                              நிழல்...
நீ என்னை தொடர்ந்து 
வந்த பொழுதும் நான் 
உன்னை விட்டு விலகியே 
நடந்து சென்றேன் முன்னோக்கி 
நீ என்னை பின்
தொடர்ந்து வந்ததை அறியாமல் 
அனால் பின் உணர்ந்தேன் 
உன்னை விட்டு நான் 
விலக முடியாது என்றும் 
நீ என் நிழலேன்றும்......
கண்டுபிடிப்பும்! கதையும்!
ஜெராக்ஸ் மெஷின்: நாம் அடிக்கடி உபயோகிக்கும், அதுவும் முக்கியமாக மாணவர்கள் அதிகமாக 
உபயோகிக்கும் ஒரு சாதனம் ஜெராக்ஸ் மெஷின்.  இது  எழுதுகளையும்  சித்திரங்களையும் மறு பதிவு எடுக்க உதவும்  இயந்திரம் . அது பிறந்த கதையை இப்பொழுது பார்ப்போமா? அமெரிக்காவை  சேர்ந்த  "செஸ்டர் கார்ல்சன் "என்ற விஞ்ஞானி அசல் பிரதியை
அப்படியே மீண்டும் மறு பதிவு செய்யும் கருத்தைச் சொன்னார். 1938- இல்  இவர் சொல்லிய படி "ஜெராக்ஸ் முறை" முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. 1947- ஆம்  ஆண்டில் ஜெராக்ஸ்  முதல்  இயந்திரம்  இவர்  ஆலோசனைப்படி  அமெரிக்காவில்  உருவாக்கப்பட்டது...    
 

Wednesday, August 22, 2012

கண்டுபிடிப்பும்  கதையும்... 
 பென்சில்
                பேனாவை போல பெரிதும் உபயோகப்படுவது பென்சில். பென்சில் மூலம்  நாம் எழுதலாம், சித்திரங்கள் தீட்டலாம். "பெனிசிலாஸ்"  எனும் இலத்தீன் சொல்லிலிருந்து "பென்சில்" எனும் சொல் பிறந்தது. அதற்க்கு "சின்ன வால்" என்று பொருள்.
                 பென்சில் செய்யப் பயன்படும் 'கிராபைட்' ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கபட்டு விட்டது. இருந்தும், கிராபைட்டைக்  கொண்டு 
1760-   அம் ஆண்டில் தான் பென்சில் உற்பத்தி செய்யப்பட்டது. ஜெர்மன் 
நாட்டை சேர்ந்த  ஃபேபர்  எனும் குடும்பத்தார் இம்முயற்சியில் ஈடுபட்டு 
தோல்வியடைந்தார்கள்.   1795- ஆம் ஆண்டு, 'என்.ஜே. கண்டே' என்னும் ஜெர்மானியர்   கிராபைட்டுடன்  களிமண்ணை சேர்த்தார். அந்தக் கலவையை அவர் சிறு குச்சிகளாகச் செய்து, உலை மூலம் காயவைத்து, பென்சில்களை முதன் முதலாக உருவாக்கினார் . பென்சிலின் புறப்பகுதி தனியாக 'பைன்' மரத்திலிருந்து செய்யப்படுகிறது...
               இன்று சுமார் 500 வகையான ரகங்களில் பலவிதமான பயன்பாட்டிற்கு பென்சில்கள் உலகெங்கும் தயாராகின்றன ....
 
                    மறு ஜனனம்...
இருபது வயதில் மறு
ஜனனம் கொண்டேன் நீ
உன் காதலால் என்னில்
உன் உயிரை பரிமாறிய
அந்த நொடி பொழுதில்... 

Saturday, August 18, 2012

                   கடற்கரையில்....
கடற்கடரை யில்  என்னவள் மெதுவாய் 
கால் நனைத்த பொழுது
நனைந்தது அவள் கால்கள்
மட்டுமா? இல்லை, என்
நெஞ்சமும் கூட தான்
நெடு நாட்களுக்கு பிறகு
நானும் அவளும் ஒன்றாய்
மணலில்  கை கோர்த்து
நின்றோம் சுகமாய் இருந்தது
அந்த கதகதப்பு ஆஹா! 
அங்கே என்னவளைக் கண்டு
ஆர்பரித்தது கடல் அலை
மட்டும்  அல்ல என்
குழந்தை நெஞ்சமும் தான்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகும்
அதே வசீகரம் அவளிடத்தில்;
மெய் சிலிர்த்தேன் அவளை
தீண்டி வந்த அலை
என்னை தீண்டும் பொழுது......

Friday, August 17, 2012

         அன்றொரு நாள் மாலை....
அன்றொரு நாள் மாலை 
பொழுதினிலே உன்னைக் கண்டேன் 
முத்து மழை சாரலாய் 
என்னை நீ நனைத்தாய் 
அன்பே  உன் பார்வையின் 
அர்த்தம் தெரியாமல்  துவண்டேன்
இது காதலா இல்லை
வெறும் அன்பா அல்லது
வெறும் பார்வை தான்
என பொய் கூற
நினைகிறாயா சொல் அந்த
மரணம் என்னை தீண்டுவதற்குள்......
              குளிர் மழை சாரல்.....
நித்தம் எரிகிறேன் 
உன்னை நினைத்து
தழல் வெந்து
முடியும் முன்னர்  
என்னை அணைப்பாயா 
உன் குளிர்
மழை சாரலால் ....????
              உன் இதழின் ஓரம்....
தாரகையே உன் 
இதழின் ஓரச்
சிரிப்பால் என்னை
ஆண்டாய்  சொல்
இன்னும் எத்தனை
நாள் வேண்டுமானாலும்
ஏன் என்
ஆயுட் காலம்
முழுவதுமே உனக்கு
அடிமையாக இருக்க
இன்பமாய் காத்திருக்கிறேன்....
                  கண்மணியே.......
கண்மணியே உன்னை  நான் 
ன் கண் இமை 
போல் பாதுகாப்பேன் உன் 
அருகே நான் இருந்தால்.......
                    காதல் மொழி.......
காதல் மொழி 
பேசி வரும் 
என் கனிமொழியே 
நித்தம்  நான்
உன் மொழி
கேட்டிட ஆசை
உன் பொன் 
மடி சாய்ந்து...... 
                    இதழின் ஈரம்....
சுகந்தமாக உன்
அன்பின் ஆழத்தை
உணரவைத்தாய் உன்
இதழின் ஈரத்தால் ........

Wednesday, August 15, 2012

                தேநீர் கோப்பை....
உன் தேநீர்
கோப்பையாக பிறக்க 
நினைக்கிறன் தினமும்
காலை உன்னை
முத்தம் இட....... 
                               அனாதை.....
வீடு வாசல்
சொத்து   சுற்றம் 
இருந்தும்  நான் 
அனாதை தான் 
அவள் இல்லாத 
இந்த இடத்தில்....
                         தெய்வம்...
கோவில் மணியோசையும் 
தெய்வ நடமாட்டத்தையும் 
கண்டேன்;
என் வீட்டின் 
சமையல் அறையில்.....
விட்டதை தொடர சொல்கிறேன்....
விட்டதை  தொடர சொல்கிறேன்  
நீயோ; 
தொடர்ந்ததை விட சொல்கிறாய் 
விடுவேன், 
உயிரை; உன் காதலை 
அல்ல...

                          மாயை.... 
மாயை என்றால் 
என்ன என்று 
கேட்டவனிடம் கூறினேன் 
மாயை என்றால்
அது பெண்
ஏனெனில் மாயை
என்பது ஒரு
புரியாத அனால்
அழகிய புதிர்....
                      பனித் துளி .......
நீ என்னோடு இல்லா 
நேரம் மட்டும் கல்லை
போலக் கரைந்து சென்றாலும்
நீ என்னோடு இருக்கும்
அந்த நேரம் மட்டும்
பனித் துளி போலக்
கரைந்து செல்வது ஏனோ 
அது உன் மாயம் தானோ......?

EN KAVIDHAI

                              சுவாசத்தை ஸ்பரிசிக்க.......
பிறந்தால் அவள் 
வீட்டு மரமாய் 
பிறக்க வேண்டும் 
எந்தன் பெண் 
மயிலின் சுவாசத்தை 
நித்தம்  ஸ்பரிசிக்க...  
                  புவி ஈர்ப்பு விசை...
புவி ஈர்ப்பு விசை
உன் கண்ணில் இருப்பதனாலோ 
என்னவோ நான் உன் 
கண்ணில் என்னை தொலைத்தேன் 
என்னைத்  தேட நினைத்தும் 
தேட முடியாமல் வழி 
மாறி உன் பொன்
நெஞ்சத்தை அடைந்தேன் நான்
இன்னும் செல்ல நினைக்கிறன் 
உன் மனதின் அடி
வானம் வரை உன்னோடு 
என் கை கோர்த்து... 

Tuesday, August 14, 2012

EN KAVIDHAI

           உன்னை பார்த்த நொடி...
உன்னை பார்த்த அந்த
நொடியோடு இறக்க நினைக்கிறன்
நீ என் கண்ணை
விட்டு பிரிய கூடதென்பதற்காக... 
                                                             சாரதி...
சாரதியாய் நான்  இருக்க 
ரதி நீ என் 
பொன் ரதத்தில் வர 
என்ன ஒரு மாதவம் 
செய்ததோ என் ரதம் 
ஆஹா உன் பொற் 
பாத கமலம் பட்டதும் 
வீடுபேறு கிடைத்ததே அதற்கு.... 

EN KAVIDHAI

                           உன் கரம்...
 மரக் கிளையை 
என்னவள் தொடும் 
பொழுது சிந்தியது 
மழைத் துளி
மட்டும் அல்ல 
என் கண்ணீரும் 
தான் ஏனினில் 
இலை பட்டு 
என்னவளது பூ
கரம் சிவக்குமே... 

EN KAVIDHAI

                            கார் காலம் ...
கொஞ்சும் மைனாக்கள் 
கொஞ்சிய பொழுது
பொறாமை கொண்டேன் 
நீ என் 
அருகில் இல்லை 
இனிமை தரும் 
இந்த கார் 
காலத்தில் என்னையும் 
அறியாமல் அழுதேன் 
குளிர் மழையோடு
பாவம் அது 
யாரை பிரிந்து 
அழுகிறதோ தெரியவில்லை.... 


EN KAVIDHAI...

                             பெண்  பித்தன்...

காசும் வேண்டாம் 
பணமும் வேண்டாம் 
சொத்தும் வேண்டாம் 
சுற்றமும்  வேண்டாம் 
என் காதல் 
ஒன்றே எனக்கு 
போதும் என்றதற்கு
இந்த உலகம் 
தந்த பட்டம் 
பெண் பித்தன் ...!

Wednesday, August 1, 2012

                                               அந்த நாள்...!
கல்லூரி பேருந்தில் 

செல்லும் பொழுது 
சாலையில் இருக்கும் 
பள்ளியை நினைத்த  - பொழுதில் 
என்  காலம் 
என்னையே  அறியாமல் 
பின்னோக்கி சென்றது 
அங்கு நீ - என்னை 
அழைத்து செல்லும் 
காட்சி மேகம் 
போல் முன்
நோக்கி சென்றது...!!!
                                புகை...!
தொழிற் சாலையின் 

புகையின் ஊடே 

கரைகிறது - என் 

சுவாசத்தின் ஆயுள் ...!!!