Monday, December 19, 2011

aa.thi.mu.ka vilirundhu sasikala mattum annarathu aadharavaalargal dhideer neekam

ஏறக்குறைய 25  ஆண்டு கால சசிகலாவின் ஆதிக்கத்தில் இருந்த ஆ.தி.மு.க இன்று அன்னாரது   நீகத்தால் புதுவாழ்வு  பெற்றுள்ளது... சசி மற்றும் அவரது ஆதரவாளர்களின் நீக்கத்தால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்... ஆ.தி.மு.க பொது செயலலரின், இந்த அதிரடி நடவடிக்கை தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது... திருப்பூரில்   தொண்டர்கள் இனிப்பு வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்... மொட்டை அடித்து கொண்டு தங்களின் ஆதரவை ஜெ. அவர்களுக்கு தெரிவித்த சம்பவமும் நடைபெற்றது... மொத்தம் 12 பேரை ஜெ. நீக்கினர். அவை பின்வருமாறு,
1. சசிகலா   
2. நடராஜன்
3. தினகரன்
4. சுதாகரன்
5. திவாகர் (மன்னார்குடி)
6. பாஸ்கரன்
7. ராமசந்திரன்
8. வெங்கடேசன்
9. ராஜராஜன்
10. குலோத்துங்கன்   
11. இராவணன்
12. மோகன்

மேலும்  இவர்களுடன் யாரும் எந்த ௦ விதமான  தொடர்பும் வைத்திருக்க கூடாது என்றும் தமது கட்சியினரை எச்சரித்துள்ளார்.... இந்த 12 பேரும் சசிகலாவின் நெருங்கிய வட்டாரம்... ஜெ வின்  இந்த திடீர் செயலுக்கு காரணம்.. சசியின் ஆ.தி.மு.க கைபட்றல் திட்டம் தான் காரணம் என்று உறுதி செய்யபடாத தகவலும் கூடுதலாக கிடைத்துள்ளது...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பாடா இனிமே ஆ.தி.மு.க நல்லபடியா இருக்கும்.... ஜெ. யின் இந்த முடிவு தாமதமாக அரங்கேறியிருந்தாலும்... இப்பொழுதாவது எடுத்தரே என சந்தோஷப்பட்டு கொள்ளலாம்.... இனிமேல் தொண்டர்கள் எந்த வித குறுக்கீடுமின்றி கட்சித் தலைமையை பார்க்கலாம் என நம்புவோம்... இந்த முடிவு ஆ.தி.மு.க ஆட்சிக்கு வெற்றியா இல்லை தோல்வியா  என்பதை   பொறுத்திருந்து பார்போம்....        
      

Sunday, December 18, 2011

mayavathi's speech

லக்னோவில் நடந்த பேரணியில் மாயாவதி அவர்கள் முஸ்லிம் ஹிந்து சகோதரதுவ்ஸ்திற்கு குந்தகம் விளையுமாறு பேசியுள்ளார், அவர் கூறியதாவது;
முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் எப்பொழுதும் துரோகம் இழைத்துள்ளது. முஸ்லிம்களை ஒரு  வோட்டு வங்கியாக மட்டுமே பயன்பதுதுகிறதே தவிர அவர்களின் நலனுக்க எதையுமே  காங்கிரஸ் அரசு செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் அதிக அளவில் வன்முறைகள் நிகழ்ந்தன ....................................

இவ்வாறு பேசிய அவர் பா.ஜ வையும் சாடினார்... அவை பின் வருமாறு:
        பா.ஜ கட்சி விஷயத்தில் காங்கிரெஸ் மென்மையாக நடந்து கொண்டதால், அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் , விஷ்வா ஹிந்து பரிஷத், மற்றும் பாஜ்ரங்தளம் போன்ற அமைப்புகள் பலம் அடைந்து விட்டன. இதனால் பாபர் மசூதி இடிப்பு நிகழ்ந்தது.


---------------------------------------------------------------------------------------------------------------
ஏம்மா தெய்வமே ரெண்டு மதமும் ஒத்துமையா இருக்குறது உனக்கு புடிக்கலையா... நீ ஏன் அதுதவன சீண்டி பார்க்குற... நீ உன் மாநிலத்துல வளர்ச்சி பணிக்காக என்ன பண்ணணு  மொதல்ல பாரு... இப்போதான் அவங்க ரெண்டு பெரும் பழச மறந்துட்டு ஒன்ன இருக்க பார்க்குறாங்க (அட! நா நம்ப ஹிந்து, முஸ்லிம் சகோதரர்கள பத்தி சொன்னேன்பா காங் , பா.ஜ பத்தி இல்ல )... இவங்க ஸ்டேட்ல  இருக்குற முக்கிய பிரச்சனைய மொதல்ல பார்க்க சொல்லுங்க பாஸு அப்புறம் பழைய பிரச்சனைய எல்லாம் கிண்டி பார்த்துக்கலாம்... ஐயோ ஐயோ... அவங்களே மறந்தாலும் இவங்க விடமாட்டாங்க போல இருக்கே....    

Thursday, December 1, 2011

kandanam therivikadhadhu yen???

கடந்த 26 ஆம் தேதி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள சலாலா எல்லைச் சாவடி மீது நாடோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 பாக்.., வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து பாகிஸ்தானில் தடை செயப்பட்ட இயக்கமான ஜமாத் உத் தவா இயக்கதினர், கராச்சியில் (28 ஆம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் இந்த தாக்குதலுக்கு சம்மந்தமே இல்லாத இந்திய நாட்டு தேசியக் கொடி எரிக்கப்பட்டது.... பாவம் ஓரிடம்... பழி ஓரிடம்... இந்த செய்கைக்கு இன்றுவரை இந்தியா பேருக்கு கூட கண்டனமோ அறிக்கையோ வெளியிடவில்லை... அந்த அளவுக்கு  இந்தியர்களுக்கு  சொரணை  கேட்டு  விட்டது  போலும்.... ஆம் இவர்களுக்கு ஊழல் செய்வதற்கும் மக்களை ஏமாற்றுவதற்குமே நேரம் போதவில்லை இதில் இதை எங்கே இவர்கள் கவனிக்க போகின்றனர்... எல்லாம் நம் இந்தியா மக்களின் தலை விதி... ஒரு காலத்தில்  ஆங்கிலேயனுக்கு பயந்தோம் இப்பொழுதோ கொள்ளை கூடத்திற்கும் தீவிரவதிகளுக்கும் அஞ்சும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் ... இந்நிலைக்கு அரசியல்வாதிகள் மட்டுமே பொறுப்பு அல்ல சில மக்களும் தான்...  இனியாவது சொரணை உள்ளவர்களாக இருங்கள்...