கடந்த 26 ஆம் தேதி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள சலாலா எல்லைச் சாவடி மீது நாடோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 பாக்.., வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து பாகிஸ்தானில் தடை செயப்பட்ட இயக்கமான ஜமாத் உத் தவா இயக்கதினர், கராச்சியில் (28 ஆம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் இந்த தாக்குதலுக்கு சம்மந்தமே இல்லாத இந்திய நாட்டு தேசியக் கொடி எரிக்கப்பட்டது.... பாவம் ஓரிடம்... பழி ஓரிடம்... இந்த செய்கைக்கு இன்றுவரை இந்தியா பேருக்கு கூட கண்டனமோ அறிக்கையோ வெளியிடவில்லை... அந்த அளவுக்கு இந்தியர்களுக்கு சொரணை கேட்டு விட்டது போலும்.... ஆம் இவர்களுக்கு ஊழல் செய்வதற்கும் மக்களை ஏமாற்றுவதற்குமே நேரம் போதவில்லை இதில் இதை எங்கே இவர்கள் கவனிக்க போகின்றனர்... எல்லாம் நம் இந்தியா மக்களின் தலை விதி... ஒரு காலத்தில் ஆங்கிலேயனுக்கு பயந்தோம் இப்பொழுதோ கொள்ளை கூடத்திற்கும் தீவிரவதிகளுக்கும் அஞ்சும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் ... இந்நிலைக்கு அரசியல்வாதிகள் மட்டுமே பொறுப்பு அல்ல சில மக்களும் தான்... இனியாவது சொரணை உள்ளவர்களாக இருங்கள்...
No comments:
Post a Comment