Wednesday, February 29, 2012

                    வெளிச்சத்தை தேடி

EPISODE: 2                                
TOPIC: BORNEO ISLAND

தேடல் தொடர்கிறது....
 
போர்னியோ தீவில் பல விதமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. ஏறத்தாழ அங்கு 15,000  உயிர் வகை  பூஞ்செடிகள் உள்ளன, அவற்றுள் 3000 உயிரினங்கள் மரங்களாகும். 221  உயிரினங்கள் தரை வாழ் பாலூட்டி. 420 பறவையினங்கள் (அங்கு வாழும் பறவை இனம்) வாழ்கின்றன. போர்னியோ தீவு தான் பல உயிரினங்களின் சரணாலயம் நினைக்கும் பொழுது மெய்சிலிர்கிறது. போர்னியன் ஓரங்குடன் குரங்கு மிகவும் பிரசித்திபெற்றது. அங்கு பல உயிரினங்கள் உள்ளன உதாரனமாக சில: 
ஆசிய யானை, சுமத்திரன் காண்டா மிருகம், போர்னியன் க்லௌடேட் சிறுத்தை, அரிய வகை  பாலூட்டியான ஹோசெஸ் சிவெட்,
தாயக் ப்ரூட் பேட். இப்பகுதியில்  டபின் வைல்ட்லைப் ரிசர்வ் பாரெஸ்ட் உள்ளது. யாது இங்கு உள்ள மிருகங்களை பாதுகாக்க உதவுகிறது.           

                                                               தேடல் தொடரரும்... 



 


Tuesday, February 28, 2012

                வெளிச்சத்தை தேடி...


வணக்கம்.... இன்றிலிருந்து ஒரு புதிய அத்தியாயம்.... வெளிச்சத்தை தேடி , இது உலகை பற்றிய ஒரு தேடல். என்ன நாம் தேடலைத் தொடங்குவோமா??? 


முதலில் நாம் நம் போர்னியோ   தீவை நோக்கி பயணிப்போம் ....


போர்னியோ தீவை நீங்கள் அநேகமாக கேள்விப் பட்டு இருப்பீர்கள். (ஒரு ஹின்ட் தரேன் அனகோண்டா தி ஹன்ட் பார் தி ப்ளட் ஆர்சிட் - என்கிற படத்தில் கேள்விப் பட்டிருப்பீர்கள்)....



போர்னியோ...  உலகிலயே மூன்றாவது   மிகப்பெரிய தீவு. இது ஜாவா தீவு மற்றும் இந்தோனேசியா ஆகியவற்றிற்கு வடக்குப்  பகுதியில் உள்ளது.  போர்னியோவின் அருகில் ப்ருனெய், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் உள்ளன.  போர்னியோ  தீவில் உள்ள மவுண்ட் கினபாலு தான் அத்தீவில் உள்ள பெரிய மலை சிகரம் 13,435 அடி உயரம்(கடலில் இருந்து)....  


பனி காலம்(ஐஸ் ஏஜ்) முடிந்த பிறகு ஏற்பட்ட புதிய பூமியில்   போர்னியோ தீவு தான் ஆசிய கண்டத்தில் பெரும் பகுதியாக இருந்தது  என்றே சொல்லலாம்.  போர்னியோ தீவு, ஜாவா மற்றும் சுமாத்ரா  தீவுகள் ஆகியவற்றின் ஒன்றுபட்ட கூட்டணியே, இந்த பெரும் பகுதியாகும். கிழக்கு நோக்கி சென்ற இதன் பகுதியே இன்று இருக்கும் இந்தோசீனா மற்றும் தாய்லான்டாகும்...  


தீவைப்பற்றி பார்த்தோம்... தீவு என்று ஒன்று இருந்தால் காடு என்று ஒன்று இருக்கும் அல்லவா.... இப்பொழுது இந்த காட்டை நோக்கி பயணிப்போம் ...  
போர்னியோ மழைக்காடு 130  மில்லியன் வருட பழமை பழமை வாய்ந்தது, இது அமேசான் மழைகாட்டை விட 70 வருடம்  பழமை வாய்ந்தது... ஆக  போர்னியோ மழைக்காடு தான் அமேசான் காட்டை விட மிகவும் பழமை வாய்ந்தது என்று தெரிகிறது. 
போர்னியோ   பழமைவாய்ந்த மழைக் காடுகளின் குடில் என்றே சொல்லலாம்.

போர்னியோ தீவில் பலவிதமான உயிரினங்கள் வாழ்ந்து வாழ்ந்து வருகின்றன.

                                            தேடல் தொடரும்...
         









Friday, February 24, 2012

my poems for college (project) ad

பொருளின் பெயர்: காஞ்சி சில்க்ஸ் 

 பாடல்:

( வந்தாளே வந்தாளே வானத்து தேவதை) 3 
காஞ்சி சில்க்ஸ் ஆடையில் வந்தாள்


வந்தாளே வந்தாளே நெஞ்சை கொள்ளை கொள்ளவே 

வந்தாளே வந்தாளே என்னை உருக்கி செல்லவே 

வந்தாளே வந்தாளே வீசும் தென்றல் போலவே 

காஞ்சி சில்க்ஸ் பட்டாடையில்   வந்தாள்......


டாக் லைன் : காஞ்சி சில்க்ஸ் இது வானவில்லின் வசிப்பிடம்