Friday, November 4, 2011

EAN KAVIDHAI (MY POEM)

                 குழந்தைத் தொழிலாளி 
எங்களுக்கும் ஆசைதான்
அறிவியலும் ஆங்கிலமும்
கலையும் காவியமும்
படிக்க வேண்டுமென
விதியாரை விட்டது
எங்களுக்கு கிடைத்த
பாடம் தொழிற்கல்வி

வீடு கட்டும் 
பொழுது செங்கலுடன்
எங்கள் உழைப்பையும் 
வைத்துப் பூசுகின்றனர்

பண்டிகையில் பட்டாசை
வெடிக்கும் பொழுது 
வெடிப்பது பட்டாசுகள்  
மட்டும் அல்ல
எங்களின் கனவுகளும்
ஆசைகளும் தான் 

உணவகங்களில் துடைக்கப்படுவது 
மேசைகள் மட்டுமல்ல 
அதன்மேல் சிந்தும் 
எங்கள் கண்ணீரும்தான் 

அஞ்சும் அஞ்சும் 
பத்து என
படிக்க வேண்டிய
பிஞ்சு நாங்கள்
ஆனால் இன்றோ
பஞ்சாலையில் வேலைக்காக
பஞ்சாய்ப் பறக்கிறோம்

முறுக்கு பிழியும்
போது முறுக்கைவிட 
அதிகம் பிழியப்படுவது
எங்கள் மனம்தான்
முறுக்கின் முட்களைவிட
எங்கள் வாழ்வில் 
முட்கள் அதிகம் 

ஆனால் முன்பைவிட
எங்கள் நிலை
நல்ல முன்னேற்றம்
கண்டுள்ளது ஏனெனில்
எங்கள் தாய் 
பிறந்த உடன்   
எங்களை கொல்லாமல்   
வேலைக்கு அனுப்புகிறளே
அவள் வாழ்க!!!   
 
 


 



3 comments:

  1. innum ithu pondra padaipugalai padaikka enathu vazhthukal..

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்! தொரடர்ந்து எழுதுங்கள்... நிறைய படியுங்கள். அப்போதுதான் கவிதையின் செறிவான வடிவம் கைகூடும். மீண்டும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ungal iruvarukkum eanadha manamaarndha nandri...

    ReplyDelete